புதன், 5 டிசம்பர், 2012

செவிகொண்டோர் பார்வைக்கு

சாதியற்ற சமுகம் வேண்டும் என்று சொன்ன பாரதியே
எங்கள் மக்கள் சாகும் நிலை பார்த்தாயா,

என்ன கேட்டோம் இந்த தமிழ்நாட்டில்
எங்கள் வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது தாய் நாட்டில்..........

தாழ்த்தப்பட்ட மக்கள் என்று தள்ளிவைக்கும் சமுகமே
எங்கள் தரங்களை உயர்த்திக்கொள்ள வாய்ப்பு தர மட்டோயோ......

மக்களுக்காக போராடும் தோழர்களே
எங்கள் மக்களின் வீடுகள் சூறையாடப்படுவதை பார்த்தாயோ.....

எங்கே அடைந்து போனது
உங்கள் செவிகள்.......

எங்கே திசை மாறியது உங்கள்
பார்வை.........

வாயடைத்து போனதா உங்கள் நாவு....

பாதுக்காக்க குட ஆளில்லா சமுகம்மாக மாறும்
நிலை கண்டோம்...

மாற்று நிலை வாறதோ ஏங்கி தவிக்கும் எங்கள்
தாழ்த்தப்பட்ட இளைய சமுகம்.....

எங்கள் வலியை உங்களால் உணரமுடியாமல்
போனது ஏன்?

நாங்கள் தலித் என்பதாலா!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக